சிவசக்தி
by விமலா
சக்தியின் மீதேறி ஆடும்
சிவனின் கால்கள்
இறங்குவதேயில்லை
ஒருபோதும்
வலிந்து துடைத்தெறியும்
சக்தியின் கண்ணீர்
பெரும் ஆறாகி வழிகிறது
அவள் உடலெங்கும்
தன்இருப்பை விட்டு விலகிட
கால் கடுக்க
தவமிருக்கிறாள் சக்தி
பன்னெடுங்காலமாக...
சிவனின் கால்கள்
இறங்குவதேயில்லை
ஒருபோதும்
வலிந்து துடைத்தெறியும்
சக்தியின் கண்ணீர்
பெரும் ஆறாகி வழிகிறது
அவள் உடலெங்கும்
தன்இருப்பை விட்டு விலகிட
கால் கடுக்க
தவமிருக்கிறாள் சக்தி
பன்னெடுங்காலமாக...
பெருவாரி இந்தியப்பெண்கள் நிலை!!
வாழ்த்துக்கள்!!
இந்த படத்துக்கு என்ன சொல்லுவிங்க?
http://www.indhistory.com/img/hindu-gods-kali.jpg
சும்மா தமாசுக்கு தான்!! :))
தவமிருந்து என்ன வரம் கேட்க வேண்டும்? யாரிடம் கேட்க வேண்டும்? சக்தி எப்போதுமே தனது சக்தியை நம்புவதில்லை போலும்!