காமப்பாத்திரம்
by விமலா
அவனின் எல்லா பிரயத்தனங்களுக்கு பின்னும்
ஒளிந்திருக்கிறது
ருசி கண்ட ஒரு மிருகத்தின் குரூரம்
அவள் பூர்த்தி செய்யும் எல்லா தேவைகளுக்கு
பின்னும் பதுங்கியிருக்கிறது
வெறிகொண்ட ஒரு செந்நாயின் தந்திரம்
பளிச்சென்று பல்லிளித்து
கொண்டிருக்கிறது
நிரம்பி வழியும் காமப்பாத்திரம்
ஒளிந்திருக்கிறது
ருசி கண்ட ஒரு மிருகத்தின் குரூரம்
அவள் பூர்த்தி செய்யும் எல்லா தேவைகளுக்கு
பின்னும் பதுங்கியிருக்கிறது
வெறிகொண்ட ஒரு செந்நாயின் தந்திரம்
பளிச்சென்று பல்லிளித்து
கொண்டிருக்கிறது
நிரம்பி வழியும் காமப்பாத்திரம்
முகத்திலறையும் யதார்த்தம்...ம்ம்ம்
செக்ஸ் என்பதே ஒருவித புனிதம் நிறைந்தது. ஒரு விதையை நட்டு கவனத்துடன் கையாண்டு அது முழை வந்து மொட்டாகி பூக்கும் வரையும் காத்திருப்பதை ஒத்தது செக்ஸ். அதை ஏன் இப்படி கபளீகரமாக எழுதினீர்கள்.
நன்றி, பங்காளி...!
நளாயினி,
செக்ஸ் புனிதமா/ புனிதமில்லையா என்ற கேள்விக்கே நான் செல்லவில்லை.
காதலின் ஈர்ப்பே காமத்தின் விளைவுதானே!