தயவுசெய்து நிறுத்திவிடு

என் குளக்கரையில் அமர்ந்துகொண்டு கல்லெறிவதை
தயவுசெய்து நிறுத்திவிடு

சலனங்களை மறைத்துகொண்டு
நெளிந்து சுளித்து ஓடுவதற்கு
நானொன்றும் காட்டாறல்ல
தேங்கிக் கிடக்கும் குளம் நான்

சலனங்கள் என்னுள் படர்ந்து
கரைவதை வெறுமனே
பார்த்து கொண்டிருக்கும் குளம் நான்

என் குளக்கரையில் அமர்ந்துகொண்டு கல்லெறிவதை
தயவுசெய்து நிறுத்திவிடு

4 comments:

    சலனங்கள் என்னுள் படர்ந்து
    கரைவதை வெறுமனே
    பார்த்து கொண்டிருக்கும் குளம் நான்

    மனது வலித்தது.

     

    அருமையாக இருக்கு

     

    நன்றி, ரூபஸ்!

     

    வணக்கம் தோழி,
    எல்லா குளங்களிலும் கல் எறிபவர்களும், மீனுக்கு பொறி போடுபவர்களும் இருக்கிற சந்தர்ப்பங்கள் அதிகம். இந்த கவிதை ஏற்படுத்திய வட்டங்களும் சதுரங்களும் அதிகம் என்றுதான் சொல்லவேண்டும். "தயவுசெய்து நிறுத்திவிடு" கவிதை தலைப்பாக இருந்தாலும் வாசிப்பை நிறுத்திவிட்டு போகிற சந்தர்ப்பம் வாயக்கவில்லை.
    வாழ்த்துகள் . தரமான நல்ல வலை பூ தளம். தொடருங்கள் எல்லாம் வசமாகும்..


    அன்புடன்,
    ஆர்.நாகப்பன்.

     

Blogger Templates by Blog Forum