என் முதல் கவிதை
by விமலா
ஒரு நடுநிசியில் எதிர்பார்த்திராத
ஒரு பொழுதில்
உயிர் பெற்று உருக்கொண்டது
அடிநெஞ்சில் கணன்று கொண்டிருக்கும்
சூட்டில் வைத்து பாதுகாத்தேன்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாய்
முளைக்க வளர்தெடுத்தேன்
அதற்கான நாளை அதுவே
குறித்துக் கொண்டது
கவனமாய் காத்திருந்தேன்
வெயில் தின்று கருத்த ஒரு
மாலை வேளையில்
பெற்றேடுத்தேன்
என் முதல் கவிதையை
சில கண்ணீர்துளிகளோடும்
சில புன்சிரிப்போடும்
ஒரு பொழுதில்
உயிர் பெற்று உருக்கொண்டது
அடிநெஞ்சில் கணன்று கொண்டிருக்கும்
சூட்டில் வைத்து பாதுகாத்தேன்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாய்
முளைக்க வளர்தெடுத்தேன்
அதற்கான நாளை அதுவே
குறித்துக் கொண்டது
கவனமாய் காத்திருந்தேன்
வெயில் தின்று கருத்த ஒரு
மாலை வேளையில்
பெற்றேடுத்தேன்
என் முதல் கவிதையை
சில கண்ணீர்துளிகளோடும்
சில புன்சிரிப்போடும்
ம்ம்ம் கலக்குங்க ..
தொடரட்டும் ..
உங்கள் கவிதை தொடுப்புக்கள் ...
தொரணங்களாக !
நன்றி சுந்தர்!
வாழ்த்துக்கள்!
கவிதை பிறக்கும் நேரத்தை நாம் கணித்திட முடியாது... காளான் போன்று எதிர்பாராத நேரத்தில், இடத்தில் நொடிப்பொழுதில் பொறிதட்டப் பொறித்திடும்! இங்குபேட்டர் குஞ்சுகள்போல வியாபாரக் கவிதைகளைத்தான் வலுக்கட்டாயமாக யோசித்து, யாசித்துப் பெற முடியும்... ஆனால் அதில் சுவையை எதிர்பார்க்க முடியாது.
கவுதமன்,
வாழ்த்துக்களுக்கு நன்றி!
கவலைப்படாதீங்க!!நல்ல கவிதையத்தான் பெத்து இருக்கீங்க!! வாழ்த்துக்கள்!!
வருகைக்கு நன்றி, குட்டிபிசாசு!
:)