அவன்
by விமலா
வெகுதூரம் பயணித்திருந்தான் அவன்
இளைப்பாற கிடைத்தது
ஒரு மரத்தடி
உறக்கம் கலைந்து கண்விழிக்கையில்
கட்டப்பட்டிருந்தது அவனின்
கைகளும் கால்களும்
அம்மரத்தின் பழங்களே அவன்
உணவாயின
அம்மரத்தின் இலைகளையே
உடுத்திக் கொண்டான் அவன்
அதன் நீட்சியே
அவனின் காலமுமானது
இறுதியில் அம்மரமே
அவனுடைய பயணமாயிற்று
இளைப்பாற கிடைத்தது
ஒரு மரத்தடி
உறக்கம் கலைந்து கண்விழிக்கையில்
கட்டப்பட்டிருந்தது அவனின்
கைகளும் கால்களும்
அம்மரத்தின் பழங்களே அவன்
உணவாயின
அம்மரத்தின் இலைகளையே
உடுத்திக் கொண்டான் அவன்
அதன் நீட்சியே
அவனின் காலமுமானது
இறுதியில் அம்மரமே
அவனுடைய பயணமாயிற்று
புரியவில்லை.
வாங்க நளாயினி!
ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள உறவைக்குறித்து எனக்கு தோன்றியது.
//புரியவில்லை.//
இதுவும் உங்கள் நவீன ஓவியம் போலதான் நளாயினி... ஆனால் அதைவிட இதில் புரிதல் சற்று எளிதாக இருக்கிறது.
எனக்கு இக்கவிதையைப் படிக்கும்போது காலத்தோடு போட்டிபோடும் நமது முயற்சியைக் கைவிட்டு சற்று அயற்சியாய் இருந்துவிட்டால் நமது பயணத்தை தீர்மானிக்கும் சக்தியை காலம், தன் கையில் எடுத்துக்கொள்ளும் என்ற எச்சரிக்கையை உணர முடிந்தது...
நன்றி கவுதமன்!
ரொம்ப அருமையான புரிதல்..
கவிதையின் தனிச்சிறப்பே இதுதான்.
எழுதியவர் தான் எதிர்க்கொண்ட
அனுபவத்தை வார்த்தைகளைக கொண்டு ஓர் வடிவமாக்க வாசிப்பவர்
அதை வேறு பல விதங்களில்
பொருத்தி பார்ப்பது...