கண்ணீரின் குரல்

அந்தரத்தில் தாவும் கால்கள்
உணர்ந்திருக்குமா
வாழ்விற்கும் சாவிற்குமான
இடைவெளியின் தூரத்தை..


இருத்தலின் பசி இழுத்துச்
செல்கிறது எவரையும் ஏதோவொரு
விளிம்பின் எல்லைவரை ......


சிரித்து கொண்டிருக்கும் முகத்திற்கு
பின்னால் மறைந்திருக்கக்கூடும்
இது வரமா சாபமா
என்றதொரு முடிவில்லா கேள்வி...


யார் கேட்டிருப்பார்
அழுகின்ற கண்ணீரின்
குரலை.....

3 comments:

    கண்ணீருக்குக் குரல் இருக்கும் என்பதை இதுவரை சிந்தித்ததில்லை. நன்றாக இருக்கிறது.

     

    நன்றி தமிழ்நதி! உங்கள் வரவு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

    ஒரு 'Acrobatic' நிகழ்ச்சியில், அந்த கலைஞர்களைக் குறித்த எண்ணங்களின் விளைவு!

     

    இந்த இடைவெளி குறித்து சதா உழன்று கொண்டிருந்த பொழுதில் இக்கண்ணீரின் குரலை கேட்கமுடிந்தது..மிக நன்று

     

Blogger Templates by Blog Forum