காலியாகிப் போன
மதுகோப்பையில்
நிரம்பிவிட்டிருந்தது
நிறமில்லாதொரு
வெற்றிடம்

வரவழைக்கப்பட்ட உற்சாகம்
வடிந்து போய்
வெகுநேரமாகி போயிருந்த
ஒர் இரவில்
ஆயத்தமில்லாமல் உயிர்பெற்று
கொண்டது நாளையற்ற
ஒன்றை குறித்ததென்
தீவிரம்

வரிசைப்படுத்தப்பட்ட
புட்டிகளில்
நிரம்பிகிடக்கிறது
பலவிதங்களாய் ரசம்

கோப்பையினுள்
நிரப்புவதும் பின்
காலிசெய்வதுமென
தள்ளாடியபடியே
வந்தடைகின்றன
பெருவாசலை கால்கள் .....

8 comments:

    உங்கள் கவிதைகள் யோசிக்க வைக்கின்றன. நிறைய எழுதுங்கள் விமலா.

     

    நல்ல வரிகள்! ரசித்தேன்!

     

    இந்த வரிசைப் படி படித்துப் பாருங்களேன்......
    ஆனா தலைப்பை மாத்தனும்...

    'வெற்றிடம் நிரம்பிய மதுக்கோப்பைகள்'

    ////////////

    வரிசைப்படுத்தப்பட்ட
    புட்டிகளில்
    நிரம்பிகிடக்கிறது
    பலவிதங்களாய் ரசம்;

    கோப்பையினுள்
    நிரப்புவதும் பின்
    காலிசெய்வதுமென
    தள்ளாடியபடியே
    வந்தடைகின்றன
    பெருவாசலை கால்கள்;

    வரவழைக்கப்பட்ட உற்சாகம்
    வடிந்து போய்
    வெகுநேரமாகி போயிருந்த
    ஒர் இரவில்
    ஆயத்தமில்லாமல் உயிர்பெற்று
    கொண்டது நாளையற்ற
    ஒன்றை குறித்ததென்
    தீவிரம்;

    காலியாகிப் போன
    மதுகோப்பையில்
    நிரம்பிவிட்டிருந்தது
    நிறமில்லாதொரு
    வெற்றிடம்.....

    ///////////

     

    வந்ததற்கு நன்றி! குட்டிபிசாசு

     

    அறிவன்,

    இதென்ன அதிகப்பிரசங்கித்தனம்!

    அடுத்தவங்க கவிதையை இப்படி கொலை செய்யறதை விட்டுட்டு உருப்படியா ஏதாவது பண்ணாலாமே?!

     

    Sorry,
    Will not visit/comment on your page again.
    But if you think all people commenting,should only appreciate you,you may be wrong...

     

    /But if you think all people commenting,should only appreciate you,you may be wrong.../

    When I publish my work in the blog I know for sure that it's open for any kind of criticism - positive or negative.

    Anyone has the right to criticize it's formation, style, language, idea...

    But dare not touch the originality of the work.

     

    நல்லா இருக்கு கவிதை + தலைப்பு. பாராட்டுகள்.

    அப்புறம் ஒரு விஷயம். படிப்பவர்கள் வரிசையை மாற்றியோ அல்லது வார்த்தைகளை மாற்றியோ தமக்கான பிரதியை உருவாக்கிக் கொள்ளலாம்; அதிலென்ன தவறு இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் சில கவிதைகளை அவ்வாறு தான் வாசிக்க இயலும் (உதா: பிரம்மராஜன், எஸ் சண்முகத்தின் பெரும்பாலான கவிதைகள்). நீங்கள் எழுதியிருப்பது ஆசிரியப் பிரதி, வாசகர்கள் அதிலிருந்து உருவாக்கிக் கொள்வது வாசகப் பிரதி (அர்த்தம் கூட அப்படித்தான்; நீங்கள் ஒன்றை நினைத்து எழுதியிருப்பீர்கள், வாசகர்கள் பல தளங்களில் அவற்றைப் புரிந்து கொள்ளக் கூடும்). அப்படித் திறந்திருக்கும் எழுத்துக்கள் தாம் பன்முக வாசிப்பைச் சாத்தியப் படுத்தும்.

    இன்னைக்குத்தான் உங்க பக்கத்திற்கு வந்தேன். ஒரு தளத்திற்கு மேலேயே இருக்கின்றன உங்கள் எழுத்துகள். தொடர்ந்து எழுதுங்கள்.

    தவறாக ஏதாவது சொல்லியிருந்தால், மன்னிக்கவும்.

     

Blogger Templates by Blog Forum