உறுபசி
by விமலா
மரத்தினின்று உதிர்ந்து
மண்ணையடையும்
பழுத்த மஞ்சளடர்ந்த
இலையின்
சாத்தியத்திற்குப்பட்டதில்லை
நாட்காட்டி களைந்தெறியும்
நாட்கள்
தீராப்பசியுடன் தவிக்கும்
அட்சயப்பாத்திரம் ஒன்றை
கையிலேந்தி
தின்று மென்று விழுங்கி
போதாமல் விழையும்
இரவிலும் விழித்திருக்கும்
காடு
நீர்த்திவலைகள் முகத்திலறையும்
அருவியின்
நீண்ட கரையோரங்களில்
செழிந்திருக்கும் புதர்களினுடே
அடையாளமற்று சொரிந்திருக்கும்
பூக்கள்
நெளியும் புழுக்களின்
சாயலை ஒத்த
வார்த்தைகளைக் கொண்டு
இதை வடித்து
கொண்டிருப்பவனின் கையில்
உறைத்திருக்ககூடும்
உறுபசி
மண்ணையடையும்
பழுத்த மஞ்சளடர்ந்த
இலையின்
சாத்தியத்திற்குப்பட்டதில்லை
நாட்காட்டி களைந்தெறியும்
நாட்கள்
தீராப்பசியுடன் தவிக்கும்
அட்சயப்பாத்திரம் ஒன்றை
கையிலேந்தி
தின்று மென்று விழுங்கி
போதாமல் விழையும்
இரவிலும் விழித்திருக்கும்
காடு
நீர்த்திவலைகள் முகத்திலறையும்
அருவியின்
நீண்ட கரையோரங்களில்
செழிந்திருக்கும் புதர்களினுடே
அடையாளமற்று சொரிந்திருக்கும்
பூக்கள்
நெளியும் புழுக்களின்
சாயலை ஒத்த
வார்த்தைகளைக் கொண்டு
இதை வடித்து
கொண்டிருப்பவனின் கையில்
உறைத்திருக்ககூடும்
உறுபசி
இந்தக் கவிதையும் நல்லா இருக்கு!
எங்க கவிதாயினி காயத்ரி தாக்கம் கொஞ்சம் இருக்கும் போல :))
/////////
இலையின்
சாத்தியத்திற்குப்பட்டதில்லை
நாட்காட்டி களைந்தெறியும்
நாட்கள்
/////////
இதில என்ன சொல்ல வர்ரிங்க? உதிர்ந்து விழும் இலையின் 'சாத்தியம்' என்ன?
/////////
தீராப்பசியுடன் தவிக்கும்
அட்சயப்பாத்திரம் ஒன்றை
கையிலேந்தி
தின்று மென்று விழுங்கி
/////////
அட்சயபாத்திரம் எது? காடு எதை தின்று விழுங்குகிறது?அல்லது இரவு தின்று விழுங்குகிறதா?எதை?
////////
உறைத்திருக்ககூடும்
உறுபசி
////////
உறுபசி உறைந்திருப்பதால் வார்த்தைகள் வடிக்கப் படுவதில் நடக்கும் விவரணம் என்ன??
அல்லாத்துக்கும் மேலலலலலலல.....
இதில சொல்லியிருக்கிற இலை,நாட்கள்,காடு,பூக்கள்,நெளியும் புழுவான வார்த்தைகள் எல்லாத்துக்கும்,உறுபசிக்கும் என்னா சம்பந்தம்???????????
புரியலப்பு,எழுதுறவங்க கோவிக்காம கொஞ்சம் வெளக்குங்க...
ரொம்பக் கண்ணைக் கட்டுதப்பு...
(ரொம்பக் கோவமா வந்தா எனக்கு ஒரு மின்மடல்ல தட்டுங்க...) :-)
அறிவன்,
கவிதைங்கிறததே ஒரு வார்த்தை விளையாட்டு..ஏதோ ஒரு அனுபவத்தை உள்வாங்கி சில குறியீடுகளையும்,கொஞ்சம் அழகியலையும்
பயன்படுத்தி வடிவம் கொடுக்கிறது..அதன் அழகே புரிதலில் இருக்கிறது.
அத விட்டுட்டு..கவிதைக்கு பொழிப்புரையோட கோனார் நோட்ஸ் வேறயா?
/////////
அதன் அழகே புரிதலில் இருக்கிறது
/////////
ரொம்ப சரியாச் சொன்னிங்க,ஆனால் புரியற அளவுக்கு என்ன இருக்கு/இல்ல,எதுனா இருக்கான்னுதான் கேள்வியே..
இந்தக் கவிதையும் எனக்குப் பிடிச்சிருக்கு.
'இரவிலும் விழித்திருக்கும் காடு' நல்ல படிமம். 'நெளியும் புழுக்களில் சாயலை ஒத்த வார்த்தைகள்' நல்ல வார்த்தைச் சேர்க்கை...
Again, பாராட்டுகள்.
நல்ல கவிதை
சூப்பர்..
வாழ்த்துக்கள்
சூர்யா
சென்னை
butterflysurya@gmail.com
சூப்பர்..
வாழ்த்துக்கள்
சூர்யா
சென்னை
butterflysurya@gmail.com