வலியுணர்தல்
by விமலா
வீடு திரும்பும் பின்னிரவில்
வீதியங்கும்
வெப்பம் வன்கலவிய
காற்றின் துளிகள்
உரக்க உரையாடிக் கனத்த
இடைவெளிகளை
அருவருக்கத்தக்க மெளனங்களால்
நிரப்பிவிட்டிருந்தோம்
பற்கடிப்போ விசும்பலோ
தன்னிலை விளக்கமோ
ஒன்றிரண்டு கண்ணீர்துளிகளோ
இதில் ஏதாவது ஒன்றோ
சொல்லி விடுமா என்
வலியை எவருக்கும்
பாதையின் இருமருங்கிலும்
யாருமற்ற நிற்கும்
ஒற்றைப் பனைமரங்கள்
தலைபறக்க...
வீதியங்கும்
வெப்பம் வன்கலவிய
காற்றின் துளிகள்
உரக்க உரையாடிக் கனத்த
இடைவெளிகளை
அருவருக்கத்தக்க மெளனங்களால்
நிரப்பிவிட்டிருந்தோம்
பற்கடிப்போ விசும்பலோ
தன்னிலை விளக்கமோ
ஒன்றிரண்டு கண்ணீர்துளிகளோ
இதில் ஏதாவது ஒன்றோ
சொல்லி விடுமா என்
வலியை எவருக்கும்
பாதையின் இருமருங்கிலும்
யாருமற்ற நிற்கும்
ஒற்றைப் பனைமரங்கள்
தலைபறக்க...
///உரக்க உரையாடிக் கனத்த
இடைவெளிகளை
அருவருக்கத்தக்க மெளனங்களால்
நிரப்பிவிட்டிருந்தோம்///
தீவிரமான வரிகள்...உங்கள் வலைப்பூவிற்கு வருவது இதுவே முதல்முறை..மற்ற(முந்தைய) கவிதைகளையும் படிக்க விரும்புகிறேன்..நேரம் கிடைக்க வேண்டும்..
நீண்டநாட்கள் இந்தப் பக்கம் வரவில்லை. அதிகமேன்... எந்தப் பக்கமும் போகவில்லை:) புத்தக வேலைகள்...
வெடித்தெழும் விசும்பலை நாம் பற்கடித்து உதட்டுக்குள் வைத்திருக்கவேண்டும். அதுவே சமூகநியதி.
"வெப்பம் வன்கலவிய"என்ற பிரயோகத்தை 'போலச்செய்தல்'என்ற எனது கவிதையில் நானும் பாவித்திருக்கிறேன்:)